தொழில்துறை வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்

தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு வித்திட்டதில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்துக்கு முக்கிய பங்குண்டு. இது 1949ம் ஆண்டு நிறுவப்பட்டது.

புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளை விரிவாக்குவதற்கும், தொழில்களை நவீனமயமாக்குவதற்கும், உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும், தொழிற்சாலைகளை சீரமைப்பதற்கும், மின்னுற்பத்தி சாதனங்களை வாங்குவதற்கும், நடைமுறை மூலதனம் பெறுவதற்கும் தொழில் முதலீட்டுக் கழகம் கடன் தந்து உதவுகிறது.

இதனால் தமிழகத்தில் உள்ள குறு, சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மிகுந்த பயன் அடைகின்றன.இக்கழகம் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது.  6 மண்டல அலுவலகங்களையும்,  25 கிளை அலுவலகங்களையும், 5 கள அலுவலகங்களையும் கொண்டு சிறப்பான முறையில் இயங்கி வருகிறது.

இக்கழகம் 31&-3&-2012 வரை 1,11,823 நிறுவனங்களுக்கு ரூ.9,412  கோடி கடன் வழங்கியுள்ளது. 2011-&12ல் மட்டும் கிட்டத்தட்ட 20140 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கி உள்ளது.இக்கழகம் அளிக்கும் நிதி உதவியில் 90 விழுக்காடு குறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்குச் செல்கிறது. இதில் சுமார் 40 விழுக்காடு முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு அளிக்கப்படுகிறது.

முதன்முதலாக தொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோருக்கு அவர்களிடமிருந்து குறைந்த மூலதனம், சிறிய அளவிலான இவற்றைப் பெற்று கடன் உதவி செய்கிறது. கடனை திருப்பிச் செலுத்த நீண்டகால தவணை நிர்ணயித்து இருப்பதால் தொழில் முனைவோருக்கு மிகுந்த பயன்அளிப்பதாய் உள்ளது.

மத்திய மாநில அரசுகள் வழங்கும் மானியங்களைப் பெற்றுத் தரும் இணைப்பு முகவராகவும் இக்கழகம் செயல்படுகிறது. தொழில் துவங்குபவர்களுக்கு மானியத்தை விரைவாக பெற்றுத் தருகிறது. அரசு மானியத்தை பெறுகின்ற காலம்வரை இடைக்கால மானியக் கடனையும் இக்கழகம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

3.9.2012லிருந்து இக்கழகத்திலிருந்து கடன்பெறும் சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கு 3 சதவீத வட்டிச் சலுகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது இந்நிறுவனங்களுக்கு மிகச் சிறந்த வரப்பிரசாதமாய் அமைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு
044 -2433 1485
 
அருள்

 

Issues: