பஞ்சம்

தமிழகத்தின் உயிர்களை காவு வாங்கிய தாது வருட பஞ்சம்

தமிழகத்தில் பல்வேறு பஞ்சங்கள் தோன்றியுள்ளன. அவற்றில் முக்கியமானது 1876 ம் ஆண்டின் தாது வருஷப் பஞ்சம். இன்னொரு பஞ்சம்1896ல் தமிழகத்தைத் தாக்கியது. இந்த பஞ்சங்களுக்கு முக்கிய காரணம் ஆங்கிலேயர்களின் அடக்குமுறை கொண்ட ஆட்சி முறையே.
கிழக்கிந்தியக் கம்பெனிதான் சென்னை நகரை உருவாக்கியதென்பது நாம் அறிந்ததே. அதன் ஆட்சியில் 1640 ல் துவங்கி 1907 வரை சுமார் 17 முறை அன்றைய சென்னை மாகாணத்தை உணவுப் பஞ்சங்கள் தாக்கின.
துவாதசப் பஞ்சம், தாதுப் பஞ்சம், குண்டூர்ப் பஞ்சம், ஒரிஸ்ஸா பஞ்சம் என்று பஞ்சங்களுக்குப் பெயர் வைக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை இந்த பஞ்சங்கள் காவு வாங்கின.