ஆதார் அட்டை

அவசிய தேவையாகிவிட்ட ஆதார் அட்டை..

இந்திய மக்கள் அனைவருக்கும் அடையாள அட்டையை வழங்குவதற்காக, ஆதார் அட்டை என்கிற மிகப்பெரிய திட்டத்தை முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. தற்போதைய பாஜக அரசிலும் அந்த திட்டம் தொடர்கிறது.
இந்தியா முழுவதும் சுமார் 80 சதவீத மக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ளோருக்கு இன்னும் 6 மாதத்தில் ஆதார் அட்டை வழங்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதார் அட்டையில் ஒவ்வொரு வருக்கும் தனி எண் வழங்கப்படுகிறது. பயோமெட்ரிக் அடிப்படையில் கைவிரல் ரேகை, கண் கருவிழியின் ரேகை, முகம் போன்ற பல தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, ஆதார் அட்டையை போலியாக உருவாக்க முடியாது.