பெண் தொழில் முனைவோர்

கொட்டிகிடக்கிடக்கிறது... சுயதொழில் வாய்ப்புகள்

பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்பு என்பது இன்றைக்கு மிகவும் பரந்து விரிந்து உள்ளது. 30 வருடங்களுக்கு முன்பெல்லாம் ஊறுகாய், அப்பளம், சமையல் பொடி போன்றவற்றை தயாரித்தல், தையல் வேலை செய்தல் உள்ளிட்டவற்றில் தான் பெண்கள் கவனம் செலுத்துவார்கள். இதைத்தான் சுய தொழிலாக பெருமையாக கருதுவார்கள்.
இன்றைய நிலைமையோ முற்றிலும் வேறு. பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள், பெரும் அளவில் விரிவடைந்துள்ளன.

பெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:

சமீப காலமாக பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெண்கள் பணிக்கு செல்வதன் முக்கிய நோக்கமே குடும்ப வருமானத்தை பெருக்கி கொள்வதற்குதான்.
கிராமபுறங்களில் பெண்கள் அதிக அளவில் விவசாய பணிகளுக்கும், கட்டிட பணிகளுக்கும் செல்கின்றனர். நகர்புறங்களில் அலுவல் சார்ந்த பணிகளுக்கு அதிக அளவில் பெண்கள் செல்கின்றனர். அதே சமயத்தில் சுயதொழில் முனைவோர்களை பொறுத்தவரை பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைவுதான்.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆண்களின் பங்கை போலவே பெண்களின் பங்கும் முக்கியமானதாக இருக்கிறது.