பங்குச் சந்தை

பங்குச்சந்தை தின வணிகம்: எச்சரிக்கையோடு செயல்படுதல் அவசியம்

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே. குறிப்பாக நாள் வணிகத்தில் லாபம் பெறுவது மிகச் சிலரே.
நாள் வணிகம் மிக எளிமையானதாகவும் அதிக லாபகரமானதாகவும் தோற்றமளிக்கலாம். ஆனால், நாம் ஒவ்வொரு கணமும் தயார் நிலையில் இருப்பது அவசியம்.

வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யலாமா?

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்வதைப் போல, இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் இந்தியர்கள் சிலருக்கு, வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய ஆர்வம் இருக்கும்.
செபியில் பதிந்துள்ள, மியூச்சுவல் ஃபண்ட்களை வழங்கும் இந்திய நிறுவனங்கள் 7மில்லியன் அமெரிக்க டாலர் வரம்பிற்குள் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
எனவே செபியில் பதிவு செய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மூலமாக வெளிநாட்டில் முதலீடு செய்யலாம். இடர்பாட்டு அடிப்படையை பொறுத்து, முதலீடு செய்ய பல்வேறு முதலீட்டு தேர்வுகள் உள்ளன.

குஜராத்தில் புதிய சர்வதேச பங்குச் சந்தை..முதலீடு குவியும் என எதிர்பார்ப்பு!

குஜராத் மாநிலத்தில் தற்போது செயல்பட்டு வரும் பன்னாட்டு நிறுவனங்களுக்காகவும், புதிய நிறுவனங்களுக்கு பயன்படுவதற்காகவும் குஜராத்தில் புதிய சர்வதேச பங்குச் சந்தையை அமைக்க மும்பை பங்குச் சந்தை ஆணையம் முடிவு செய்துள்ளது.
மும்பை, கொல்கத்தா, டில்லி, சென்னை போன்ற முக்கிய பெரு நகரங்கள் இருக்கையில் சர்வதேச பங்கு சந்தையை அமைக்க குஜராத் மாநிலம் தேர்வு செய்யப்பட்டது ஏன் என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது. பிரதமரின் மோடியின் செல்வாக்கு இதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.