தொழில் சிந்தனை

மாற்றங்களை ஏற்று செயல்படும் நிறுவனம் வெற்றிக்கொடி கட்டும்...

அறிவியல் வளர்ச்சி காரணமாக புதிய தொழில் நுட்பங்களும், புதிய மாற்றங்களும் அதிகரித்து வருகின்றன. தொழில்துறையில் ஈடுபட்டுள்ளவர் கள் இது போன்ற புதிய மாற்றங்களை மனமுவந்து ஏற்று செயல்படுத்த வேண்டும்.

நிறுவனத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் 3‘சி’ கோட்பாடு

ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கான நிறுவனங்கள் தோன்றினாலும் சில நிறுவனங்கள் மட்டுமே தொழிற்துறையில் தொடர்ந்து இயங்குகின்றன.
 நட்டம், இயக்குனர் குழு சண்டை, தொழிலாளர்கள் பிரச்சனை, மாறிவரும் சூழலை புரிந்து கொள்ளாமை, போட்டியை எதிர்கொள்ள முடியாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏராளமான நிறுவனங்கள் மெல்ல மெல்ல மறைகின்றன.

முயற்சியே மூலதனம்!

தெய்வத்தார் ஆகாதெனினும் முயற்சி - தன் மெய்வருத்த கூலி தரும்
என்றார் வள்ளுவர்.
ஒரு தொழிலை தொடங்குவதற்கு அடிப்படை முதலீடே முயற்சிதான். பணம், சொத்து என்ப தெல்லாம் பிறகுதான். முயற்சியோடு ஆர்வ மும் இருந்தால் பணத்தை எப்படி திரட்டுவது என்ற வழி முறையை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
ஒரு தொழில் முனைவோர் தனக்கு நன்கு தெரிந்த தொழி லையே தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு அதற்கான முதலீட்டை திரட்டுவது குறித்து சிந்திக்க வேண்டும்.

பழைய ஐடியாக்களை தொழிலில் பின்பற்றலாமா?

பல நேரங்களில் நமக்கு மாறுபட்ட சிந்தனை தோன்றுவது உண்டு. அத்தகைய சிந்தனையை தொழிலாக மாற்றி வெற்றி பெறுபவர்கள் சிலரே.
சிலரால் முடிகிறபோது பலரால் முடிவதில்லையே ஏன்? அதற்கு காரணம் கணிப்பில் ஏற்படுகிற தவறும் செயல்பாட்டில் ஏற்படுகிற தொய்வும்தான்.
நமக்கு தோன்றும் ஐடியாக்களை தொழிலாக மாற்றுவதற்கான நடவடிக்கையில் இறங்குவதற்கு தடையாக இருப்பது தயக்கம்தான். தயங்குவது நல்லதுதான். எல்லா நேரங்களிலும் தயங்குவது தொழிலில் பெறுவதற்கு உதவாது.
நமக்கு ஐடியா கிடைக்கவில்லை என்றாலும், பிறரது ஐடியாக்களை கொண்டுகூட தொழிலை தொடங்கி வெற்றி பெற முடியும்.

தொழிலில் புகுத்துங்கள்...காலத்துக்கு ஏற்ற புதுமையை!

1991 ம் ஆண்டு இந்திய தொழில் முனைவோர்களுக்கு ஒரு பொன்னான ஆண்டு என்றே சொல்ல வேண்டும். அந்த ஆண்டில்தான் நமது இந்தியா உலகமயம், தாராளமயம், தனியார்மயம் கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வந்தது.
இதன் காரணமாக ஏராளமான புதிய தொழில் வாய்ப்புகள் கிடைத்தன. அதற்கு முன்பெல்லாம் ஒரு புதிய தொழிலை தொடங்குவது என்பது குதிரை கொம்பான விஷயமாகும். அதற்கு காரணம் கடுமையான கட்டுப்பாடுகள் நிலவி வந்தது தான்.
புதிய பொருளாதார கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகு இந்தியா ஏராளமான மாற்றங்களை கண்டது. புதிய தொழில்கள் ஏராளமாக இந்தியாவிற்கு வந்தன.