தடா ஸ்ரீசிட்டி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் ஆல்வின் கோல்டன் சிட்டி நிறுவனத்தின் மனைப்பிரிவுகள்...

சர்வதேச அளவில் முன்னணி ரியல்எஸ்டேட் நிறுவனமாக திகழ்ந்து கொண்டிருக்கும், ஆல்வின் கோல்டன் சிட்டி நிறுவனம் சார்பாக, ஆந்திர மாநிலம் தடாவில் அமைந்துள்ள ஸ்ரீசிட்டி சிறப்பு பொருளாதார மண்டல பகுதிக்கு அருகாமையில் ‘ஆல்வின் தடா கோல்டன் சிட்டி’ என்னும் பெயரில் மனைப்பிரிவுகள் அமைய உள்ளது, இதற்கான ஆரம்பகட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறுகிறார் இந்நிறுவனத்தின் சேர்மன், லயன் டாக்டர் வீ.பாப்பா ராஜேந்திரன். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:  

 ‘அனைத்து தரப்பு மக்களுக்கும் சொந்தமாக சொத்து கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், ஏராளமானோருக்கு  வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காகவும் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் ஆல்வின் கோல்டன் சிட்டி.

2 லட்சம் வாடிக்கையாளர்களையும், 50 ஆயிரம் முகவர்களையும் எங்கள் நிறுவனம் பெற்றுள்ளது. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் எங்கள் நிறுவனத்தின்  கிளைகள் உள்ளன. சிங்கப்பூரிலும் கிளை உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைந்துள்ள பகுதிகளை தேர்வு செய்து அவற்றிற்கு அருகாமையில் மனை பிரிவுகளை அமைத்து நியாயமான விலையில் விற்பனை செய்து வருகிறோம்.

ஓஎம்ஆர், ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நாங்குநேரி போன்ற சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அருகாமையில் நாங்கள் மனைகளை அமைத்து வருகிறோம்.

குறிப்பாக தூத்துக்குடி அருகே உள்ள திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு அருகாமையில் நாங்கள் அமைத்துள்ள மனை பிரிவுகள் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று இருக்கின்றன.  

இந்நிலையில் ஆந்திர மாநிலம் தடாவில் அமைந்துள்ள, ஸ்ரீசிட்டி சிறப்பு பொருளாதார மண்டல பகுதிக்கு அருகாமையில் ‘ஆல்வின் தடா கோல்டன் சிட்டி’ என்னும் பெயரில் மனைப்பிரிவுகள் அமைய உள்ளது.  இதற்கான  ஆரம்பகட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இந்தப் பகுதியை நாங்கள் தேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணம் உண்டு. இந்த தடா ஸ்ரீசிட்டி சிறப்பு பொருளாதார மண்டலம், பல்துறை சிறப்பு பொருளாதார மண்டல அந்தஸ்தைப் பெற்றதாகும்.
சித்தூர் மாவட்டத்திற்கும், சத்தியவேடு சட்டமன்ற தொகுதிக்கும், திருப்பதி பாராளுமன்ற தொகுதிக்கும் உட்பட்ட தடா, ஆந்திர- தமிழக எல்லையில் என்.எச் 5 கொல்கத்தா- சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைந்துள்ள ஊராகும்.
இந்த தடா ஸ்ரீசிட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்திலிருந்து 60 கிமீ தொலைவுக்குள் சென்னை துறைமுகம், எண்ணூர் துறைமுகம், சென்னை சர்வதேச விமான நிலையம், சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள் போன்றவை அமைந்துள்ளன.

100 கிமீ தொலைவில் கிருஷ்ணபட்டினம் துறைமுகம் அமைந்துள்ளது. 50 கிமீ தொலைவில் உலகப்புகழ் பெற்ற திருப்பதி கோவில் மற்றும் திருப்பதி விமானநிலையம் உள்ளது. 1 கிமீ தொலைவிலேயே  ரயில்நிலையமும் உள்ளது.

7  ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்ட கம்பெனிகள் முதலீடு மேற்கொள்ள ஒப்பந்தம் போட்டிருக்கின்றன.  இவற்றின் மதிப்பு சுமார் ரூ 15,500 கோடியாகும்.

இதன் மூலம் நேரடியாக 30 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற இருக்கிறார்கள். இவற்றில் 60 க்கும் மேற்பட்ட கம்பெனிகள் தங்களது உற்பத்தியை தொடங்கி விட்டன. இதர கம்பெனிகள் 2016 க்குள் உற்பத்தியை தொடங்க இருக்கின்றன.
மேலும் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இந்த இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 70 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர்.

இதன் காரணமாக இப்பகுதியில் வீடுகளின் தேவையும் அதிகரிக்கும். இது ரியல்எஸ்டேட் நிறுவனங்கள் உந்துதல் பெற வழிவகுக்கும்.

பல சர்வதேச நிறுவனங்கள்,  இந்த பொருளாதார மண்டலத்தில் முதலீடு மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருவதாக ஆந்திர அரசின் செய்திக்குறிப்பு கூறுகிறது.

மேலும் அரசின் சார்பாக, வெளிநாடுகளில் தொடர்ந்து ‘தொழில்முனைவோர் கூட்டம்’ நடத்தப்பட்டு வெளிநாடுவாழ்  இந்தியர்களின்  முதலீடு கவரப்பட்டு வருகிறது.

இந்த மண்டலத்தில் தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல தடையற்ற மின்சாரம் வழங்கவும் அரசின் சார்பில் உறுதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மத்தியஅரசு இங்கு தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு பல்வேறு வரிச் சலுகைகளை அறிவித்துள்ளது.
கிரானைட், ஜவுளி,  ஆட்டோமொபைல், வேளாண்மை, உணவு பதனிடுதல், பொறியியல், மருத்துவவியல், வாகன

உதிரிபாகங்கள், மின்னணு, மென்பொருள்கள், தகவல் தொழில் நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், பொருள் போக்குவரத்து போன்றவை தொடர்பான தொழில்கள் இந்த பொருளாதார மண்டலத்தில் தொடங்கப்பட்டு வருகின்றன.

இந்த பொருளாதார மண்டலத்தை சுற்றி அமைந்துள்ள ஊர்களில் உள்ள, அனைத்து மக்களுக்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துதரப்படும் என ஆந்திர அரசால் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தால் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த பகுதியை சுற்றியுள்ள மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும்.
அதேபோல புதிய வீடுகளுக்கான தேவையும் அதிகரிக்கும். இப்போதே இப்பகுதியில் நிலங்களை வாங்க மக்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

முதலீட்டு நோக்கத்திற்காகவும், சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பதற்காகவும் மக்கள் நிலங்களை வாங்கிப்போடுகின்றனர். எனவேதான்,  இப்பகுதியில் எங்கள் நிறுவனத்தின் மனைப்பிரிவுகளும் அமைய  உள்ளது. அதற்கான வேலையில் ஈடுபட்டிருக்கிறோம். விரைவில் மனை விற்பனை தொடங்கும்’ என்று கூறினார்.

 

Issues: