அவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்
பர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடன் வாங்கும் போது சில முக்கிய விஷயங்களைக் கவனத்தில் கொள்வது அவசியம். தனி நபர் கடனுக்கான வட்டிவிகிதம் மிகவும் அதிகம். இதற்கு வங்கிகள் கூறும் காரணம், அது பாதுகாப்பற்ற கடனாம்.
பர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடன் வாங்கும் போது சில முக்கிய விஷயங்களைக் கவனத்தில் கொள்வது அவசியம். தனி நபர் கடனுக்கான வட்டிவிகிதம் மிகவும் அதிகம். இதற்கு வங்கிகள் கூறும் காரணம், அது பாதுகாப்பற்ற கடனாம்.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்புக்கு வழிவகுக்கும் சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) முறை 2016 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது. இதற்கான அரசியல் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு விட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 352 வாக்குகள் அளிக்கப்பட்டது. எதிராக 37 வாக்குகள் மட்டுமே அளிக்கப்பட்டது.
விரைவில் மாநிலங்களவையிலும் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் இந்த மசோதா சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கோரியிருந்தது.
வங்கிக் கணக்குகள், காப்பீட்டுத் திட்டங்கள், அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் உள்ளிட்ட வற்றில் முதலீட்டாளர்களின் பணம் ரூ.22 ஆயிரம் கோடி முடங்கியுள்ளது என்கிற செய்தி யாரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கும்.
மத்திய அரசின் வரி வருவாயை, மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிப்பதை வரையறுப்பதற்காக, முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஒய்.வி.ரெட்டி தலைமையில் நியமிக்கப்பட்ட மத்திய நிதிக் குழு, தனது அறிக்கையில், மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டிய நிதி சம்பந்தமாக புதிய பரிந்துரைகளை அளித்துள்ளது. அதன் அம்சங்கள் பின்வருமாறு:
மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவதால் அவை சுயமாக செயல்பட வழியேற்படும். மாநில அரசுகள் அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்த இத்தகைய கூடுதல் நிதி உதவியாக இருக்கும்.
அவசர தேவைக்கு கடன் வேண்டுமென்றால் எல்.ஐ.சி பாலிசியை வைத்தும் கடன் பெற முடியும். அதற்காக சில வழிமுறைகள் உள்ளன. அவை என்ன என்பது குறித்து பார்ப்போம்:
3 ஆண்டுகளுக்கு மேலாக எல்.ஐ.சி. பாலிசியில் பிரீமியம் கட்டுபவர்கள் மட்டுமே கடன் பெற தகுதியானவர்கள். பாலிசியின் தொகை, காலம் இவற்றை பொறுத்து எவ்வளவு கடன் தொகை என்பது நிர்ணயிக்கப்படும்.
இந்த கடனுக்கான வட்டி விகிதம் மற்ற கடன் திட்டங்களை காட்டிலும் குறைவே. ஏனெனில் எல்.ஐ.சி.க்கு இது பாதுகாப்பான கடன் ஆகும்.
இந்தியாவில் டெபிட் கார்டு, கிரடிட் கார்டு இவற்றை பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளை காட்டிலும் அதிகமாக உள்ளது. குறிப்பாக ஜன்தள் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்ட பிறகு டெபிட் கார்டு பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தற்போது வரை இந்த திட்டத்தின் கீழ் சுமார் 10 கோடிக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. கணக்குகள் தொடங்கிய அனைவருக்கும் டெபிட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. ஏடிஎம்ஐ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.