தொழில்முனைவோர் கடைபிடிக்க வேண்டிய முக்கிய ஆலோசனைகள்

ஒரு தொழில்முனைவோர் ஒரு தொழிலை தொடங்க நினைத்தவுடன் தொடங்குவது சிறந்தது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.தொடங்குவற்கான நேரம் வரவில்லை என்று சொல்லி தாமதித்தால் தொழிலில் செயல்திறன் குறைய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கிறார்கள்.
தொழிலில் அவ்வப்போது மந்தநிலை வரக்கூடும். இத்தகைய சூழலில், சில சோதனை முயற்சிகளைச் செய்ய வேண்டும். இதைச் செய்யத் தயங்க கூடாது. தயங்கினால் முடிவெடுக்கும் திறனும், தன்னம்பிக்கையும் குறையும்.
தொழிலில் உங்களுக்குப் போட்டியாக ஒரு நிறுவனம் வந்தால், அதனைக் கண்டு அச்சம் கொள்ளாதீர்கள். மாறாக வித்தியாசமாக அணுகும் மனநிலையை உருவாக்கிக் கொண்டால் எந்த போட்டி நிறுவனத்தாலும் உங்களை ஒன்றும் செய்து விட முடியாது.
எடுத்த முடிவை கைவிட வேண்டிய சூழலும் தொழிலில் வரும். முடிவில் தெளிவிருந்தால் அதை கைவிட வேண்டிய அவசியமில்லை.முடிவில் குழப்பம் இருந்தால் உரிய நிபுணர்களிடம் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் முடிவை எடுக்கலாம். சமாளிக்க கூடிய ரிஸ்க்கை எடுப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
தொழில்முனைவோருக்கு உத்திகள், தயாரிப்பு, விற்பனை போன்ற அம்சங்கள் சிறப்பானவையாக இருந்தாலும், மனரீதியாக தன்னம்பிக்கையுடன் இருத்தல் அவசியம். என்னால் முடியும் என்ற நம்பிக்கை, எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் ஆற்றலை தரும்.
இந்த மனநிலை தொழிலை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உதவும்.
தொழிலை கடமைக்கு செய்வதை விட நேசித்து செய்ய வேண்டும். கடமைக்கு செய்தால் வெற்றிகளை குவிக்க முடியாது. ஈடுபாட்டோடு நேசித்து செய்தால் வெற்றிமேல் வெற்றி வந்து சேரும். அது எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தைத் தரும். சாதாரணமாகச் செயல்படுவதைவிட இரண்டு மடங்கு அதிகமாக செயல்படுவீர்கள்.
புதிய தொழில்நுட்ப மாறுதலுக்கு உங்களை தகவமைத்துக் கொள்ளுங்கள். பல வருடங்களாகப் பயன்படுத்தி வரும், இந்த முறையிலிருந்து மாறமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தால் போட்டி நிறுவனங்கள் உங்களை முந்திக்கொண்டு விடும்.எந்தச் சூழ்நிலையிலும் உணர்ச்சி வசப்படாதீர்கள்.

Issues: