வர்த்தக அரசியல்

இகாமர்சிலிருந்து எம் காமர்சுக்கு மாறுவதில் நிறுவனங்கள் ஆர்வம்

இந்தியாவில் இகாமர்ஸ் வர்த்தகம் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் பல முன்னணி நிறுவனங்கள் இந்த வர்த்தகத்தில் பெருமளவு முதலீடு செய்து வருகின்றன. தற்போது வரை இவ்வர்த்தகத்தில் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு  பிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

கட்டுப்பாட்டை திணிக்கும் உலக வர்த்தக அமைப்பு...இந்தியாவில் மானியம் ரத்து செய்யப்படுமா?

பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விசயங்களில் மேற்கத்திய நாடுகளின் கருத்துகளுக்கு உட்பட்டே வளரும் நாடுகள் செயல்பட வேண்டிஇருக்கிறது. பணக்கார நாடுகளின் விருப்பத்துக்கு மாறாக, ஒரு வளரும் நாடு முடிவெடுத்து விட்டால் அந்நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளை, பணக்கார நாடுகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ முடக்கி விடும்.
1995-ல் WTO என்று அழைக்கப்படுகிற, உலக வர்த்தக அமைப்பு உருவானதிலிருந்தே, வளரும் நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டுத் திணிப்புகளை எதிகொள்ள வேண்டியிருக்கிறது.