வரி கட்டுபவர்களுக்கு கிடைக்கும் வரிச் சலுகைகள்என்ன?
வரி கட்டுபவர்களால் தான் நாட்டுக்கே
வருமானம் கிடைக்கிறது. டேக்ஸ் பேயர் (வரி செலுத்துவோர்) என்று சொல்லப்படுகிற இவர்களுக்கு பல்வேறு வரிச்சலுகைகளை, வருமான வரித்துறை வழங்கியுள்ளது. அவை
என்ன?
கல்விக்கடன் பெற்றிருக்கும் ஒருவர் செலுத்தும் வட்டிக்கு, வரி விலக்கு பெற முடியும். பிரிவு 80சியின் இந்தச் சலுகை வழங்கப்படுகிறது.
குழந்தைகளுக்கோ, பெற்றோர்களுக்கோ ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்திருந்தால் ரூ 25 ஆயிரம் வரை, வரி விலக்கு பெற முடியும். பிரிவு 80டியின் கீழ் இந்தச் சலுகை வழங்கப்படுகிறது.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு இன்றைக்கு ஏராளமானோர் நன்கொடை வழங்குகின்றனர். இவர்களுக்கு பிரிவு 80நியின் கீழ் வரிச்சலுகை வழங்கப்படுகிறது. இவர்கள் எந்த நிறுவனத்திற்கு நன்கொடை அளித்தார்களோ அதற்கான ரசீதை முறையாக பெற்றிருக்க வேண்டும்.
அரசியல் கட்சிகளுக்கு, தனிநபர்களை விட தொழில் நிறுவனங்கள் தாராளமாக நன்கொடை வழங்குகின்றன. இத்தகைய நிறுவனங்கள் பிரிவு 80நிநியின் கீழ் வரிச்சலுகையை அடைய முடியும்.
குறைந்த பார்வை, மூளைக் கோளாறு, காது கேளாமை போன்ற பாதிப்பிற்கு உள்ளானவர்கள், ராஜிவ் காந்தி சேமிப்பு திட்டதில் 10 லட்சம் ரூபாயை சேமித்திருந்தால் ரூ.50 ஆயிரம் வரை வரி விலக்கு பெற முடியும்.
நமது மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாயை கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் வரிச்சலுகையாக அளித்துள்ளது.
அதே போல ஏழை மக்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் ஆண்டு தோறும் சுமார் 2.50 லட்சம் கோடி ரூபாயை மானியமாக வழங்கி வருகிறது.
ஆக அனைத்து தரப்பு மக்களுக்கும் நமது மத்திய அரசு சலுகைகளை வழங்கி வருவது போற்றப்பட வேண்டிய விசயம்.