விவசாயம்

பேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்

பலரும் பேரிச்சை என்பது  ஒரு பாலைவன பயிர் என்றே கருதிக்கொண்டிருக்கிறார்கள். அது முழுமையான உண்மை அல்ல. இந்தியாவிலும் பேரிச்சை குறிப்பிட்ட அளவில் பயிரிடப்பட்டு வருகிறது.  குறிப்பாக ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் ஏராளமான விவசாயிகளால்  பயிரிடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் சில விவசாயிகளால் பேரிச்சை பயிரிடப்பட்டு வருகிறது. உரிய முறையில் பேரிச்சையை பயிரிட்டு சாகுபடி செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும்.

விவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன?

இந்தியா ஒரு விவசாய நாடு. அதனால்தான் விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பு என்று காந்தியடிகள் கூறினார். ஆனால் தற்போது விவசாயத்துறை வீழ்ச்சியை எதிர்நோக்கி உள்ளது.
வறட்சி, வெள்ளம், வசதியின்மை, பணியாள் பற்றாக்குறை, உரிய விலை கிடைக்காமை, அரசால் நிலம் கையகப்படுத்துதல், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு நிலம் விற்பனை, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் விவசாயத்துறை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வேலை கிடைக்காததால் விவசாய தொழிலாளர்களும், சிறு குறு விவசாயிகளும் விவசாய பணிகளுக்கு முழுக்கு போட்டு விட்டு வேறு தொழிலைத் தேடி நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர்.

பீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்

பெரும்பாலான மக்களால் விரும்பப்படுகிற  முக்கியமான காய்கறிகளுள் ஒன்று பீட்ரூட். இது குளிர்பகுதிகளில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. 19-ம் நூற்றாண்டு வரை இந்த காய்கறி இந்தியாவுக்கு அறிமுகமாகவில்லை. அந்த நூற்றாண்டு தொடக்கத்தில்தான் ஆங்கிலேயர்களால் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது.

செலவுக்கேற்ற உற்பத்தி இல்லாத விவசாயம்.

இந்தியாவில் நகரமயமாகும் போக்கு அதிகரித்துக் கொண்டே இருந்தாலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத் துறையின் பங்களிப்பு 14.5% ஆக உள்ளது. கடந்த ஆண்டு விவசாயத் துறையின் ஏற்றுமதி பங்களிப்பு 10.5% ஆகும்.

60 வருடங்களுக்கு மேலாக 50% பேரின் வாழ்வாதாரமாக விவசாயத்துறை இருந்து வருகிறது. தொழில் வளர்ச்சியிலும் விவசாயத் துறைக்கு முக்கிய பங்குண்டு. ஏனெனில் தொழில்களுக்கு தேவையான பல மூலப்பொருட்கள் விவசாயத் துறையிடம் இருந்துதான் கிடைக்கின்றன.

விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளிய, பருவம் தவறிய மழை! உதவிக்கரம் நீட்டுமா? மத்திய மாநில அரசுகள்?

பொதுவாக ஒரு பொருளை உற்பத்தி செய்பவர்தான் விலையையும் நிர்ணயம் செய்வார். நமது நாட்டின் பெரு நிறுவனங்களானாலும் சரி, குடிசைத் தொழிலானா லும் சரி உற்பத்தி செய்பவரே விலையையும் நிர்ணயம் செய்கிறார்.
ஆனால், மண்ணில் வெயிலும், மழையும் பாராது அயராது உழைக்கும் விவசாயிகளோ , விளைவிக்கும் பொருளுக்கு விலை நிர்ணயிக்கும் உரிமை இல்லாதவர்களாக இருக்கின்றனர்.
நிலத்தை உழுது பயிரிட்டு, அதை அறுவடைக்குக் கொண்டு வருவதற்குள் விவசாயி படும் இன்னல்கள் சொல்லி மாளாது. பயிரை விளைவித்து அதை பணம் பண்ணுவதற்கு விவசாயி மாதக் கணக்கில் காத்திருக்க நேரிடுகிறது.

நாற்று முறை கரும்பு சாகுபடியில் ஒரு ஹெக்டேருக்கு 200 டன் கரும்பு!

நாற்று மூலம் கரும்பு சாகுபடி செய்தால் இடுபொருட்களுக்கான செலவையும், பராமரிப்புக்கான செலவையும் குறைக்க முடியும். இதற்கு குறைந்த அளவு தண்ணீரே போதுமானது. இதன் விளைச்சல் இரு மடங்காக அதிகரிக்கும் என விவசாய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது கரும்பு சாகுபடிக்கு கரணை முறையே பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில் ஒரு ஏக்கருக்கு 4 டன் விதைக் கரும்பு தேவைப்படுகிறது. இதற்கான வெட்டு கூலி, சுமை வாடகை, நடவு கூலி இவற்றால் ஏக்கருக்கு சுமார் 20 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. நாற்று முறை சாகுபடி செய்யும்போது இந்த செலவை பாதியாக குறைக்க முடியும். பயிர்கள் ஆரோக்கியமாக வளர்ந்து அதிக விளைச்சலை தரும்.

நல்ல லாபம் தரும் புதினா சாகுபடி

ஒரு ஏக்கருக்கு 5 ஆயிரம் கிலோ வரை மகசூல் தரும் புதினாவை பயிர் செய்வது மிகவும் எளிது. மதுரை, திண்டுக்கல், திருவண்ணாமலை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் புதினாவை பயிரிட்டு நல்ல லாபம் பார்க்கின்றனர்.
புதினாவை வணிக நோக்கில் பயிரிடுவது நல்ல லாபத்துக்கு வழி வகுக்கும் என்பது வேளாண் அலுவலர்களின் கருத்தாக உள்ளது.
புதினா ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட ஒரு தாவரம் என்று கூறப்படுகிறது. சமையலில் புதினாவிற்கு முக்கிய இடம் உண்டு.

பாரம்பரிய விதைகளை பாதுகாக்குமா அரசு?

மரபணு மாற்று விதைகளை (Genetically Modified Seeds) எதிர்ப்பது அறிவியலுக்கு எதிரானது என்று சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சமீபத்தில் கூறியிருந்ததோடு நெல், கோதுமை, மக்காச்சோளம், சோளம், கத்தரி, கடுகு, உருளைக்கிழங்கு, கரும்பு, கொண்டைக்கடலை போன்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளின் கள ஆய்வுக்கும் அனுமதி அளிக்க மத்திய அரசு முனைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் பல மாநில அரசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழக அரசும் தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

ரசாயன உரங்களால் மலடாகும் நிலங்கள்!

எப்படியாவது இந்திய வேளாண் சந்தையைக் கைப்பற்ற, அந்நிய விதை நிறுவனங்கள் துடிக்கின்றன. குறிப்பாக மான்சாண்டோ போன்ற பன்னாட்டு விதை நிறுவனங்கள் இந்தியாவில் தனது வர்த்தகத்தை உயர்த்துவதற்காக பல்வேறு தகிடுதத்த வேலைகளை செய்து வருகின்றன.
இந்நிறுவனங்களுக்கு ஆதரவாக அமெரிக்க அரசும் பல்வேறு அழுத்தங்களை இந்திய அரசுக்கு தருவதால் நமது அரசும் பன்னாட்டு விதை நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும்போக்கை கடைபிடித்து வருகிறது.