தையல் தொழில்

வருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் இரண்டாவது இடத்தைப் பெறுவது உடை. உடை அணிவது தேவைக்கு மட்டுமின்றி,  தோற்றத்தை உயர்த்திக் காட்டவும் அணியப்படுகிறது. எனவே தான் ஆள்பாதி... ஆடை பாதி என்று சொன்னார்கள்.

உடைகள் உடுத்துவதில் ஆண்களும், பெண்களும் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகின்றனர். பல்வேறு மாடல்களிலும், டிசைன்களிலும் ஆண்களுக்கான உடைகளும், பெண்களுக்கான உடைகளும் தயாரிக்கப்படுகின்றன.