இராணுவ தளவாட பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையில் பணிவாய்ப்பு

ந்திய இராணுவத்திற்கு சொந்தமான தளவாட பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள, இராணுவ வாகனங்கள் மற்றும் அது சார்ந்த துணைப் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலையும் ஒன்று.

பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் தற்போது கார்பெண்டர்,கிரைண்டர், பிட்டர், மாசன், மில்லர், டர்னர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப 333 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பொதுப் பிரிவினருக்கு 187 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 46 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 42 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 58 இடங்களும் ஒதுக்கீடு முறையில் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகள் என்ன?

வயது வரம்பு:
18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி.பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது. முன்னாள்படை வீரர்கள், அரசு ஊழியர், ஊனமுற்றோர் போன்றோருக்கும் அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித் தகுதி:
10-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அத்துடன் பிட்டர் ஜெனரல்,
மெஷினிஸ்ட், வெல்டர், டர்னர், மில்ரைட், மெஷினிஸ்ட், கிரைண்டர் உள்ளிட்ட பணியிடங்கள் உள்ள பிரிவில் என்.ஏ.சி. அல்லது
என்.டி.சி. பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். டிகிரி, டிப்ளமோ படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள், இணைய தள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பு வெளியானநாளில் இருந்து 21 நாட்களுக்குள்விண்ணப்பம்சென்றடைய வேண்டும். கூடுதல் விவரங்களை www.vfj.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
நமது நாட்டில் தயாராகும் இராணுவ தளவாடங்கள் உதிரி பாகங்களில் 6 0 சதவீதம் அளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இராணுவ தளவாடங்கள் உற்பத்திக்கு இந்தியா சிறந்த தளமாக விளங்குகிறது. நமது நாட்டு
முன்னேற்றத்தின் குறியீடாக இராணுவ தளவாட தொழிற்சாலைகள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தில் அன்னிய முதலீடு 49 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், வரும் 5 ஆண்டுகளில்,இராணுவ தொழிற்சாலைகளில் உற்பத்தி விகிதம் 40 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக அதிகரிக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

அத்துடன் இத்துறையில் கூடுதலாக ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். உள்நாட்டில் இராணுவ தளவாடங்கள்
தயாரிப்பது, மேக் இன் இந்தியா திட்டத்தின் முக்கிய அம்சமாகும் . ந மது இராணுவ தொழிற்சாலைகளில் கண்டுபிடிப்புகளையும்
வளர்ச்சியையும் அதிகரிக்க நமது இராணுவ விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள், வீரர்கள் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அவர், இராணுவ தளவாட உற்பத்தியில் இந்தியா சர்வதேச அளவில் மிக பெரிய இடம் பிடிக்கும் எ ன் ற ந ம்பிக்கை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இனிவரும் காலங்களில், இராணுவ தளவாட பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகளிலிருந்து வேலைக்கு ஆட்கள் தேவை அறிவிப்பு அடிக்கடி வரும் என எதிர்பார்க்கலாம்.

கண்ணன்

Issues: