தொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா? தொழிலாளர் சட்ட திருத்த மசோதா
மத்திய அரசு கொண்டு வர உள்ள, தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவிற்கு தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மத்தியில், அதிருப்பதி நிலவிக்கொண்டிருகிறது என்பதை ஆங்காங்கே நடைபெறும் அவர்களின் போராட்டங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும் இந்த திருத்த மசோதாவை கடுமையாக எதிர்த்து வருகின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகளும், தொழிலாளர் சம்மேளனங்களும், சிலமாநில கட்சிகளும் தங்களது எதிர்ப்பை பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், அறிக்கைகள், பேட்டிகள் இவற்றின் வாயிலாக பதிவு செய்து வருகின்றன. இந்த தொழிலாளர் சட்டதிருத்தத்தை எதிர்ப்பதற்கு காரணம் என்ன என்ன என்பது குறித்து பார்ப்போம்.