பிசினஸ் ரகசியம்

குறைந்த லாபம்.. அதிக விற்பனை..

30ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், ஒரு கடையை நிறுவும் நிறுவனம் அந்தக் கடையை நிர்வகிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தும். கிளைகளை தொடங்குவது பற்றியோ, வர்த்தகத்தை விரிவு படுத்துவது பற்றியோ யோசிக்காது. இதற்கு தொழில்நுட்ப வளர்ச்சி அப்போது இல்லாததும் ஒரு காரணமாகும்.  

தற்போது நிலைமை மாறிவிட்டது. வர்த்தகர்களும், தொழிலதிபர்களும்  தொழில் நுணுக்கங்கள் குறித்த தகவல்களை விரல் அசைவில் வைத்திருக்கிறார்கள். ரெயிலில் செல்லும் போதும்,
விமானத்தில் செல்லும் போதும், பஸ்சில் செல்லும் போதும் கூட அவர்களால் ஒரு போனையோ அல்லது ஒரு லேப்டாப்பையோ வைத்துக் கொண்டு இருந்த இடத்தில் பிசினஸ் மேற்கொள்ள முடிகிறது.