விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளிய, பருவம் தவறிய மழை! உதவிக்கரம் நீட்டுமா? மத்திய மாநில அரசுகள்?
பொதுவாக ஒரு பொருளை உற்பத்தி செய்பவர்தான் விலையையும் நிர்ணயம் செய்வார். நமது நாட்டின் பெரு நிறுவனங்களானாலும் சரி, குடிசைத் தொழிலானா லும் சரி உற்பத்தி செய்பவரே விலையையும் நிர்ணயம் செய்கிறார்.
ஆனால், மண்ணில் வெயிலும், மழையும் பாராது அயராது உழைக்கும் விவசாயிகளோ , விளைவிக்கும் பொருளுக்கு விலை நிர்ணயிக்கும் உரிமை இல்லாதவர்களாக இருக்கின்றனர்.
நிலத்தை உழுது பயிரிட்டு, அதை அறுவடைக்குக் கொண்டு வருவதற்குள் விவசாயி படும் இன்னல்கள் சொல்லி மாளாது. பயிரை விளைவித்து அதை பணம் பண்ணுவதற்கு விவசாயி மாதக் கணக்கில் காத்திருக்க நேரிடுகிறது.