Jan 2015

குறைந்த செலவில் மின் உற்பத்தி செய்யும் கூடங்குளம் அணுமின் நிலையம்

தமிழகம் தனது மின் தேவையை எளிதாக பூர்த்தி செய்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு கூடங்குளம் அணுமின் நிலையம் மூலம் ஏற்பட்டிருக்கிறது.
இன்னும் சில ஆண்டுகளில் 4000 மெகாவாட் மின் உற்பத்தி கூடங்குளம் அணுமின் நிலையம் மூலம் கிடைக்க இருக்கிறது என்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய செய்தியாகும். இது திருநெல்வேலி மாவட்டத்திற்கும் ஒரு அரும் பெரும் செய்தி.
சுமார் 20,000 கோடி ரூபாய் முதலீடு திருநெல்வேலி மாவட்டத்திற்கு வர உள்ளது. கூடங்குளம் மின் நிலையம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் 50 சதவீதம் தமிழகத்திற்கு கிடைக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கச்சா எண்ணை குறைவால் விலை சாதகமடையும் இந்தியா

கச்சா எண்ணெயின் விலை உலக அளவில் கணிசமாக குறைந்திருக்கிறது. கடந்த ஜூன் மாதத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 110 டாலருக்கு விற்றது. தற்போது சுமார் 40 சதவீதம் அளவிற்கு விலை குறைந்து 65 டாலருக்கு விற்பனையாகி வருகிறது.
இந்த அளவிற்கு அதிரடியாக விலை குறைந்த தற்கு காரணம் என்ன? கச்சா எண்ணெயின் விலை குறைவதற்கும் அதிகரிப் பதற்கும் முன்பெல்லாம் காரணமாக இருந்தது ஐக்கிய அரபு நாடுகள்தான். இப்போது விலை குறைவிற்கு காரணமாக இருப்பது அமெரிக்காதான் என்கின்றனர் நிபுணர்கள். அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் அதிக அளவு சப்ளையாகி கொண்டிருக்கிறது.

இந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை

உலக அளவில் பொருளாதார மந்த நிலை நிலவியபோதும் இந்தியாவின் பொருளாதாரம் அதனால் பெரிதும் பாதிக்கப்படவில்லை. ஓரளவு பாதிப்பு இருந்தது என்றாலும் மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் பெரிய அளவு பாதிப்பை இந்தியா அடையவில்லை. அதனால் தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை உலக நாடுகள் ஆச்சரியத் துடன் பார்க்கின்றன.
ஆசிய அளவில் பொருளா தார ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் உள்ள இரண்டு பெரிய நாடுகள் என்றால் அது இந்தி யாவும், சீனாவும் தான்.

மாநகரங்களின் பிரச்சனையை தீர்க்க உதவும் ஸ்மார்ட் சிட்டி

ஸ்மார்ட் சிட்டி எனப்படும் சிறப்பு நகரங்களை உருவாக்குவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு இருப்பது அனைவரும் அறிந்ததே. புதிதாக உருவாக இருக்கும் இந்த ஹைடெக் நகரங்கள், நெருக்கடிகள் மிகுந்த மாநகரங்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உதவும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மும்பை, -டில்லி போன்ற பெருநகரங்களுக்கு அருகாமையில் உள்ள சிறு நகரங்களை ஹைடெக் நகரங்களாக உருவாக்கும் பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டு விட்டன.
இத்திட்டத்திற்கு சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருக் கிறது. இதில் 26 சதவீத நிதியை ஜப்பான் முதலீடு செய்யவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ காப்பீடு என்பது ஒரு சேமிப்பு

மருத்துவ செலவுகள் அதிகரித்துவிட்ட தற்போதைய காலகட்டத்தில் அந்த செலவுகளை சமாளிக்க முடியாமல் ஒவ்வொரு குடும்பமும் தத்தளிப்பதை நாம் பார்க்கிறோம். இதற்கு தீர்வாக அமைவதுதான் மருத்துவ காப்பீடு.
ஒரு வகையில் இந்த மருத்துவ காப்பீடு என்பது சேமிப்பு என்று சொல்லலாம். மருத்துவ செலவுகளுக்கு என தனியாக பணம் சேர்த்து வைப்பதைவிட ஒரு மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமான முடிவு. இதன் மூலம் குறைந்த செலவில் குடும்பத்தில் உள்ள அனைவருக்குமான மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியும்.

வேளாண் உற்பத்தியில் தன்னிறைவை அடைவதில் இந்தியாவுக்கு முட்டுகட்டை

120 கோடி மக்கள் தொகை கொண்ட நமது இந்தியா உணவு உற்பத்தியில் இன்னும் தன்னிறைவை அடைய வேண்டி இருக்கிறது. பல உணவு பொருட்களை நாம் இன்னும் இறக்குமதி செய்து கொண்டுதான் இருக்கிறோம். வேளாண்மையில் உற்பத்தி பெருகாமைக்கு தண்ணீர் பிரச்சனை ஒரு முக்கிய காரணம். மத்திய அரசு அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீரை சீராக விநியோகம் செய்ய தவறி விட்டது.
மாநிலங்களுக்கான நதிநீர் பிரச்சனையில் அரசியல் ஆதாயம் காரணமாக மத்திய அரசு பொறுப்பான முறையில் நடந்து கொள்ளாததே இப்பிரச்சனை நீடிக்க காரணம்.

தொழிலாளர்களின் சம்பள வரம்பை உயர்த்தும் மத்திய அரசின் திட்டம்நன்மைபயக்குமா?

இந்தியாவை பொறுத்தவரை அமைப்புசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கைதான் அதிக அளவில் உள்ளது. அமைப்பு சார்ந்த தொழி லாளர்கள் குறைந்த அளவிலேயே உள்ளனர்.
அத்தகைய அமைப்பு சார்ந்த தொழிலாளர் களின் உரிமைச் சட்டங்களை கூட தளர்த்துவதற்கு மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதனால் தொழிலாளர்கள் மத்திய அரசின் மீது அதிருப்தி மன நிலையில் இருந்தனர்.
இந்நிலையில் அவர்களின் அதிருப்தியை ஓரளவாவது போக்குவதற்கு சில நடவடிக்கை களையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.

பழைய ஐடியாக்களை தொழிலில் பின்பற்றலாமா?

பல நேரங்களில் நமக்கு மாறுபட்ட சிந்தனை தோன்றுவது உண்டு. அத்தகைய சிந்தனையை தொழிலாக மாற்றி வெற்றி பெறுபவர்கள் சிலரே.
சிலரால் முடிகிறபோது பலரால் முடிவதில்லையே ஏன்? அதற்கு காரணம் கணிப்பில் ஏற்படுகிற தவறும் செயல்பாட்டில் ஏற்படுகிற தொய்வும்தான்.
நமக்கு தோன்றும் ஐடியாக்களை தொழிலாக மாற்றுவதற்கான நடவடிக்கையில் இறங்குவதற்கு தடையாக இருப்பது தயக்கம்தான். தயங்குவது நல்லதுதான். எல்லா நேரங்களிலும் தயங்குவது தொழிலில் பெறுவதற்கு உதவாது.
நமக்கு ஐடியா கிடைக்கவில்லை என்றாலும், பிறரது ஐடியாக்களை கொண்டுகூட தொழிலை தொடங்கி வெற்றி பெற முடியும்.

கார் சாம்ராஜ்ய சக்கரவர்த்தி உதிர்த்த பொக்கிஷ தொழில் சிந்தனைகள்

அமெரிக்க தொழிலதிபர்களில் வெற்றிகரமான ஒருவர் ஹென்றி ஃபோர்டு என்பது நமக்கு தெரியும். இவர் மோட்டார் கம்பெனியை நிறுவிய போது இவரது முதலீடு என்பது தன்னம்பிக்கை மட்டும்தான்.
கார்களை அசெம்ப்ளி லைன் முறையில் உற்பத்தி செய்ய முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியவர். தனது ஃபோர்டு மோட்டார் கம்பெனி மூலம் அதை நிரூபித்தும் காட்டியவர்.
கார்கள் செல்வந்தர்கள் மட்டுமே வைத்திருக்க முடியும் என்ற நிலையை மாற்றி நடுத்தர மக்களும் கார்கள் வாங்க முடியும் என்ற நிலையை உருவாக்கியவரும் இவரே.

ஒரு நபர் நடத்தும் தொழிலை நிறுவனமாக பதிவு செய்ய முடியுமா?

இந்தியாவில் பெரிய நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்கள் இவற்றை விட தனி நபர் நடத்தும் தொழில்கள் தான் அதிகம் என்றால் அதுமிகையல்ல. தனி நபர்கள் நிறுவனத்தை பதிவு செய்யாமலேயே தொழில்கள் செய்கின்றனர். அதே சமயத்தில் பதிவு செய்து கொண்டு அவர்கள் தொழில் செய்தால் அரசு வழங்கும் சலுகைகளையும் பாதுகாப்பையும் பெற முடியும்.
நிறுவனம் என்கிற அடை யாளம் தொழில் முனைவோரின் கடன் வாங்கும் மதிப்பை உயர்த் தும். கடன் கொடுக் கும் வங்கிகள் தொழில் முனை வோரின் நிறுவன மதிப்பைதான் கணக்கில் எடுத்துக் கொள்ளும்.
பத்தாயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்படும் ஒரு தொழிலைக்கூட நிறுவனமாக பதிவு செய்துகொள்ள முடியும்.

Pages