கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’
மிகவும் வறுமை நிலையிலுள்ள வர்களின் வறுமை நிலையை அகற்றுவதற்கு ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சி காலத்தில், அதாவது 2005ம் ஆண்டு, புதுவாழ்வு திட்டம் என்ற ஒரு திட்டம் துவக்கப்பட்டது. இது உலக வங்கியின் நிதி உதவியுடன் அப்போது துவக்கப் பட்டது. இத்திட்டம் தமிழகத்தின் 120 ஊராட்சி ஒன்றியங்களில் தொடங்கப் பட்டு சிறப்பாக செயல்பட்டது.
அதை தொடர்ந்து வறுமை நிலையிலுள்ள ஏழை குடும்பங்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்வாதார நிலையை உயர்த்துவதற்கு தமிழகத்தின் ஏனைய 265 ஊராட்சி ஒன்றியங்களிலும், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 2012ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.